பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்
Jailer 2 movie pre booking collection: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
ஜெயிலர் 2
ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 15-ஆம் தேதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டிரைலர் வெளிவந்தபின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முன்பதிவு
இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரையிலான முன்பதிவில் இப்படம் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இது முன்பதிவில் சென்சேஷனல் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
