பண பலத்தை காட்டி மிரட்டல்.. நடிகை சோனம் கபூர் மீது லண்டன் வாசிகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஹிந்தி நடிகை சோனம் கபூர் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் 2023ல் லண்டனின் Notting Hill பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு மேன்ஷனை வாங்கினார்கள். அதற்கு சுமார் 270 கோடி ரூபாய் அவர்கள் கொடுத்தார்கள். அந்த வீட்டை இன்னும் அதிகம் செலவு செய்து சொகுசு வீடாக தற்போது மாற்றி வருகிறார்கள்.
தங்கள் புது வீட்டில் பணியாற்றப்போகும் வேலைக்காரர்களுக்காக அருகில் இருக்கும் Hillcrest அபார்ட்மெண்டில் £4 மில்லியன் ( ₹51.4 கோடி) செலவில், மொத்தம் 5 பிளாட்களை வாங்கி இருக்கின்றனர்.
அங்கு பிளாட் வாங்கி வேலைக்காரர்கள் quarters வைப்பது தான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
எதிர்ப்பு
அந்த அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது பற்றி மீடியாவிடம் பேசக்கூடாது பண பலத்தை காட்டி மிரட்டுகிறார்கள் எனவும் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் பிரபல லண்டன் மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளனர்.
கோடீஸ்வரர்களுடன் மோத பயமாக இருக்கிறது என ஒருவர் கூறியுள்ளார்.
அங்கு அதிகம் பிளாட்களை அவர்கள் வாங்கி குவிப்பதால், அதன் மூலமாக அபார்ட்மெண்டில் எடுக்கும் முடிவுகளில் அவர்களின் தலையீடு அதிகம் இருக்கிறது என ஒருவர் கூறியுள்ளார்.






