நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்… வெளிவந்த தகவல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 வெற்றி வருடம் தான்.

முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியானது, சூர்யா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இப்படம் வெளியாகி ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்தது. இப்பட வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானது.

லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி கவனம் பெற்ற வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் மமிதா பைஜு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்... வெளிவந்த தகவல் | Suriya Vishwanath And Sons Ott Release Details

ஓடிடி ரிலீஸ்


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ. 260 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 11ம் தேதி நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *