தலைவர் 173 பட டைட்டில் என்ன? அறிவிப்பு வரும் தேதி, நேரம் இதோ

ரஜினி அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் “தலைவர் 173”. அந்த படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்க போகிறார்.
முதலில் இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். ஆனால் ரஜினி கதையை மாற்ற சொன்னதால் அவர் விலகிவிட்டார். அதன் பின் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக தகவல் வந்தது. ஆனால் இறுதியில் அஸ்வத் மாரிமுத்து தான் அந்த படத்தை இயக்குகிறார்.
நாளை டைட்டில்
தற்போது “தலைவர் 173” என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது நாளை (24, ஜூன் 2026) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்து இருக்கின்றனர்.
மேலும் நாளை ஷூட்டிங்கும் தொடங்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தற்போது குஷி ஆகி இருக்கின்றனர்.
One Name
Forever a CelebrationTitle Reveal tomorrow at 10:00 AM#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/RsPA3izK9i
— Raaj Kamal Films International (@RKFI) June 23, 2026






