கருப்பு கதையை RJ பாலாஜி எங்கிருந்து எடுத்தார் தெரியுமா?

கருப்பு கதையை RJ பாலாஜி எங்கிருந்து எடுத்தார் தெரியுமா?

காமெடியனாக சினிமா துறையில் அறிமுகம் ஆகி தற்போது இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் ஆர்ஜே. பாலாஜி. அவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன கருப்பு படம் 200 கோடிக்கும் மேல் ஒரே வாரத்தில் வசூலித்துவிட்டது.

236 கோடி இதுவரை வசூலித்து இருக்கும் நிலையில், தற்போதும் தியேட்டர்களில் மக்கள் அதிகம் குவிவதால் சூர்யா கெரியரில் இந்த படம் பெரிய சாதனை வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதை

கருப்பு படத்தின் கதை எங்கிருந்து வந்தது என ஆர்ஜே பாலாஜி தற்போது தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பத்தில் இருந்து தான் கருப்பு படத்தின் கதையை தான் எடுத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

“சென்னை பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் இறங்கியபோது மர்ம நபர்கள் சில கத்தியை காட்டி என் கழுத்தில் இருந்த நகையை அறுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். போலீசில் புகார் அளித்து, பல வருடங்களுக்கு பின் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதை திரும்ப பெற நீதிமன்றத்திற்கு செல்லும்போது அதிகம் அலைச்சலை சந்திக்கவேண்டி இருந்தது.”

“பொள்ளாச்சியில் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றபோது அங்கு தீராத பிரச்சனை தீர, வேண்டிக்கொண்டு மிளகாய் அரைத்து தடவினால் நியாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருப்பதை பார்த்தேன். ”

இந்த இரண்டையும் இணைத்து தான் கருப்பு படத்தின் கதை எழுதினேன் என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *