கடும் பயத்தில் புலம்பிய நந்தினி, குடும்ப நபர் சொன்ன விஷயத்தால் எமோஷ்னல் ஆன ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
இந்த நாடு எதை நோக்கி சார் செல்கிறது என பரவலாக இந்த வசனத்தை மக்கள் பேசுவது போல் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை.
பெண்கள் எழுச்சிக்கான கதை என்று தான் ஆரம்பமானது, சீரியலின் பாடல் எல்லாம் சிங்கப்பெண்கள் ரேஞ்சிற்கு செம ஹைப்பை ஏற்றியுள்ளது. ஆனால் கதை என்று பார்க்கும் போது சீரியலில் உள்ள பெண்களின் கதாபாத்திரம் அடிமட்டத்தில் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
சீரியலில் பெண்கள் சாதிப்பது போல் காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்கள் தயவுசெய்து சீரியலை முடித்துவிடுங்கள் என புலம்பி வருகிறார்கள்.
புரொமோ
ஜனனி எப்படியோ பெரிய போராட்டத்திற்கு பிறகு தர்ஷினியை காப்பாற்றினார். ஆனால் கடைசியில் ராணா கிரிமினல் வேலைகள் செய்து தர்ஷினியை வீட்டிற்கு அழைத்து வந்து தான் காப்பாற்றியது போல் காட்டிவிட்டார், எல்லோரும் நம்பிவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்த ஜனனி மீது எல்லோரும் வெறுப்பை காட்ட விசாலாட்சி தான் ஆதரவாக நின்றார். இன்றைய எபிசோடின் புரொமோவில், ஜனனி தர்ஷினியை பார்க்க கீழே வர விசாலாட்சி நீ ஏன் கீழே வந்தாய், ஊரான் பிள்ளைக்காக ஓடியது போதும், உன் பிள்ளையை பார் என்கிறார்.
இன்னொரு பக்கம் நந்தினி ஜனனி நினைத்து புலம்புகிறார். ஜனனி பார்க்கும் பார்வை அவள் நம்மீது கோபமாக இருக்கிறாள் என புலம்ப ரேணுகா சமாதானம் செய்கிறார்.
கடைசியாக சக்தி வேறு எங்கேயாவது செல்லலாம் என்கிறார், அதற்கு விசாலாட்சி இந்த வீட்டு வாரிசு இங்கே தான் பிறக்க வேண்டும் என எமோஷ்னல் ஆக ஜனனியும் அவர் பேச்சால் எமோஷ்னல் ஆகிறார்.






