ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்

ஓரி (Orry)
இன்ஸ்டாகிராமில் பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி காணப்படும் ஒருவர் ஓரி (Orry). திரை பிரபலங்களுடன் இவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
தனக்கு எந்த குறிப்பிட்ட தொழிலும் இல்லாத நிலையிலும், சமூக வலைதள செல்வாக்கின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ஓரி.
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்
ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக ஒரு இன்ஸ்டாகிராம் REEL வீடியோ வெளியிட்டதற்கே ரூ. 76 லட்சம் வருமானம் பெற்றதாக அவர் தெரிவித்திருப்பது இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னது, ஒரு REEL வீடியோ வெளியிட்டதற்கே ரூ. 76 லட்சமா!! என ஓரி சொன்னதை கேட்டு நெட்டிசன்கள் பலரும் தலைசுற்றிப்போய்விட்டனர்.
மேலும், இவருடைய சொத்து மதிப்பு ரூ. 10 கோடி முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






