இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள்

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள்

கவின்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்களில் ஒருவர் கவின். சீரியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மக்களிடையே நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது.

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் | Actor Kavin Blessed With Twin Babies

இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த கவின், லிப்ட், டாடா, Bloody Beggar, ஸ்டார், கிஸ் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் Hi திரைப்படம் வெளிவரவுள்ளது.

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் | Actor Kavin Blessed With Twin Babies

கடந்த 2023-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னையில் விமர்சையாக நடைபெற்றது.

தந்தையானார் கவின்

இந்த நிலையில், மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் கவின் பகிர்ந்துள்ளார். அதாவது, நடிகர் கவினுக்கும் அவரது மனைவி மோனிகாவிற்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக அவர் அந்த பதிவில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நடிகர் கவினுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *