The Hidden Protector திரை விமர்சனம்

The Hidden Protector திரை விமர்சனம்


நாம் சிறுவயதில் கார்டூனில் பார்த்து கொண்டாடிய சைனிஸ் கரடி கார்டூன் தற்போது இயக்குனர் லின் இயக்கத்தில் Boonie Bears: The Hidden Protector என்ற பெயரில் படமாக வந்துள்ளது, இவை குழந்தைகளை கவர்ந்ததா? பார்ப்போம்.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review

கதைக்களம்


நாம் தமிழ் கார்டூனில் பார்த்த சின்னவனே, பெரியவனே என்ற பார்த்த கரடி அண்ணன் ப்ராயர், தம்பி ப்ளேபர், அவர்களுடைய நண்பன் விக் எல்லோரும் சந்தோஷமாக காட்டி வாழ, திடிரென அங்கு வந்த லேடி லியான் தன் பவரை இந்த 3 பேருக்கு கொடுத்து அங்கிருந்து ஓடுகிறார்.


இதனால் அந்த 3 பேரை இனி நீங்கள் தான் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என ஒரு இடத்துக்கு அழைத்து செல்கின்றனர், அங்கு ஷா என்ற அரக்கனை ஒரு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review

ஆனால், ப்ராயர் தெரியாமல் அந்த சிறையை உடைக்க, அதிலிருந்து ஷா வெளியேறுகிறார், அதோடு அந்த ஊரின் புனித தளமான அர்மிளா உடைகிறது, இதனால் கண்டிப்பாக லியான் வரவேண்டும், அவர் வந்தால் தான் இந்த அர்மிளாவை சரி செய்ய முடியும் என ஆக, லியானை தேடி ப்ராயர், ப்ளேயர், விக் கிளம்புகின்றனர்.



ஆனால், அதற்குள் எல்லை மீறி போக, அந்த அரக்கன் வெளியேற இவர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படி அந்த அரக்கனை அழித்தார்கள் என்பதே மீதிக்கதை.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review

படத்தை பற்றிய அலசல்


அனிமேஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அதிலும் ஹாலிவுட் தாண்டி ஜப்பான், சைனிஸ் அனிமேஷன் படங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.


அவர்கள் எல்லோருக்கும் அறுசுவை விருந்து தான் இந்த படம், பேண்டசி உலகின் உச்சத்தை தொட்டுள்ளனர், அதிலும் சின்னவனே, பெரியவனே மற்றும் விக் தன் சக்திகளை கண்டிப்பிடிக்கும் இடம், பிறகு தன் சக்திகளை பரிசோதிக்கும் இடம் சூப்பர்.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review


அதோடு லேடி லியானை தேடி செல்லும் இடமெல்லாம் ஜாலி கொண்டாட்டமாகவே உள்ளது, அதோடு வெறும் அனிமேஷன் படம் தானே 4,5 பைட் காமெடி என்று ஓட்டி விடலாம் என்றில்லாமல் சொல்ல வந்த கருத்துக்கே பாராட்டுக்கள்.


லேடி சுசி, லேடி லியான் இரண்டு சகோதரிகள், அதில் சுசி இறக்க, பயந்து சுபாவம் கொண்ட லியான் எப்படி வீரங்கனை ஆகிறார் அதுவும் கரடிகள் உதவியோடு என்பதை காட்டிய விதம், அதிலும் தன் மாஸ்டர் இறக்கும் போது எமோஷ்னலாகவும் ஸ்கோர் செய்துள்ளனர்.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review

கிளைமேக்ஸில் பிரமாண்டத்தின் உச்சம், 5 தலை ட்ராகன் வரும் இடம் உலகமே இருளில் சூழ, அன்பு மட்டுமே நம்மை காப்பாற்றும் ஒரு ஆயுதம் என, அன்பால் எந்த தீய சக்தியையும் அழிக்கலாம் என்ற கருத்து குழந்தைகளுக்கு நல்ல படம் மட்டுமில்லை , பாடமாகவும் உள்ளது.


டெக்னிக்கலாக அனிமேஷன் ஒர்க் பிரமாண்டத்தின் உச்சம் தான், நாம் காணும் கனவுகளை ஒரு படைப்பாக எடுத்து அதற்கு இசை சேர்த்து அழகான அனிமேஷனில் காட்டியுள்ளனர். 

க்ளாப்ஸ்


படத்தின் கதைக்களம்


திரைக்கதை


அனிமேஷன் ஒர்க்

கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டைகாட்சி


பல்ப்ஸ்


பெரிதாக ஒன்றுமில்லை


மொத்தத்தில் இந்த Boonie Bears: The Hidden Protector குடும்பத்துடன் கண்டிப்பாக பார்த்து கொண்டாட வேண்டிய சூப்பர் பயணம்.

Boonie Bears: The Hidden Protector திரை விமர்சனம் | Boonie Bears The Hidden Protector Movie Review


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *