34 வருடங்களை கடந்த நடிகர் அஜித்.. டாப் 10 திரைப்படங்களின் வசூல் விவரம்

அஜித்
தமிழ் சினிமாவில் கடந்த 34 ஆண்டுகளாக நம்மை மகிழ வைத்த நடிகர் அஜித் குமாரின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது.
GBU-வை தொடர்ந்து அஜித் நடிப்பில் AK 64 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இதனால் தான் AK 64 படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனால் அஜித்தே தற்போது AK 64 திரைப்படத்தை தயாரிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
டாப் 10 வசூல்
இந்நிலையில், இன்றுடன் நடிகர் அஜித் திரையுலகில் காலடி எடுத்துவைத்து 34 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சமயத்தில், அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த டாப் 10 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி – 268 கோடி
துணிவு – ரூ. 210 கோடி
விஸ்வாசம் – ரூ. 190 கோடி
வலிமை – ரூ. 164 கோடி
விடாமுயற்சி – ரூ. 145 கோடி
விவேகம் – ரூ. 128 கோடி
வேதாளம் – ரூ. 125 கோடி
நேர்கொண்ட பார்வை – ரூ. 107 கோடி
ஆரம்பம் – ரூ. 104 கோடி
என்னை அறிந்தால் – ரூ. 95 கோடி






