2062ல தான் அது நடக்கும்.. நடிகை த்ரிஷா போட்ட பதிவு

42 வயதாகும் நடிகை த்ரிஷா தற்போதும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து கருப்பு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் அந்த படத்தின் விழா நடைபெற்ற நிலையில் தற்போது அதில் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை. அது ஏன் என ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.
2062ல் தான்..
இந்நிலையில் நடிகை த்ரிஷா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். “ஒரு மணி நேர தூக்கத்தை தொலைத்தால் அதில் இருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகும். அதனால் என் கணக்குபடி நான் 2062ல் தான் நன்றாக உணர்வேன்” என கூறும் பதிவை த்ரிஷா ஷேர் செய்திருக்கிறார்.
அந்த பதிவு வைரல் ஆகி இருக்கிறது.






