ஹார்ட் பீட் 3 சீரிஸில் இருந்து விலகிய யோக லட்சுமி.. எமோஷ்னலாக போட்ட பதிவு

சமீபத்தில் அதிகம் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருக்கிறது ஹார்ட் பீட் சீரிஸ். அதன் ரசிகர்களுக்கு தற்போது ஷாக் கொடுத்து இருக்கிறார் நடிகை யோகலட்சுமி.
அது பற்றி மிகவும் எமோஷ்னலாக அவர் பதிவை போட்டிருக்கிறார். ஹார்ட் பீட் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அவர் பதிவை எழுதி இருக்கிறார்.
விலகுகிறேன்
இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஹார்ட் பீட் சீரிஸில் இருந்து விலகுகிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
தேஜு கதாப்பாத்திரம் பல பெண்களுக்கு ஊக்கமளித்து இருக்கிறது. நான் தேஜுவ மிஸ் செய்வேன்.
பலரும் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். இது goodbye அல்ல. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை entertain செய்துகொண்டே தான் இருப்பேன்.
இவ்வாறு யோகலட்சுமி மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.






