முன்பதிவில் வசூலை வாரிக்குவிக்கும் ஸ்பைடர் மேன்.. இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடியா

முன்பதிவில் வசூலை வாரிக்குவிக்கும் ஸ்பைடர் மேன்.. இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடியா


ஸ்பைடர் மேன்

‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.

மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு 

பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவில் இதுவரையிலான வசூல் எவ்வளவு ஆகியுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை இந்தியாவில் நடந்துள்ள முன்பதிவில் மட்டுமே ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது ஸ்பைடர் மேன் திரைப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *