முதல் முறையாக 3 வயது மகள் முகத்தை காட்டிய ராம் சரண்! இணையத்தில் படுவைரல்

முதல் முறையாக 3 வயது மகள் முகத்தை காட்டிய ராம் சரண்! இணையத்தில் படுவைரல்


நடிகர் ராம்சரண் தென் இந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். இந்திய அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) படம் அவரை உலக அரங்கிலும்கூட பிரபலமாக்கியது என்றும் சொல்லலாம்.

ராம்சரணின் மனைவி உபாசனா அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குடும்பத்தின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாத்தாதான் அப்போலோ மருத்துவமனைகளைத் தொடங்கினார். உபாசனாவின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடிக்கும் மேல் எனக் கூறப்படுகிறது. அப்போலோ மட்டுமன்றி, ஜைடஸ் (Zydus) நிறுவனத்திலும் அவர் இயக்குனராக இருக்கிறார்.

2012ல் திருமணம் ஆகி இருந்தாலும் ராம்சரண் மற்றும் உபாசனா இருவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் முதல் பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் உபாசனா கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

முதல் முறையாக 3 வயது மகள் முகத்தை காட்டிய ராம் சரண்! இணையத்தில் படுவைரல் | Ram Charan Reveal Daughter Klinn Kaara Face

மகள் போட்டோ

அவர்களது முதல் குழந்தைக்கு ‘கிளின் காரா’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். கடந்த மூன்று வருடங்களாகத் தங்களது முதல் மகளின் முகத்தை காட்டும் வகையில் புகைப்படத்தை அவர்கள் எங்கும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

தற்போது ராம்சரண் முதல் முறையாக கிளின் காராவின் முகத்தைக் காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

கிளின் காராவின் மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் ராம் சரண் போட்டோ வெளியிட்டுள்ளார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *