முதல் நாள் 'கர' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் 'கர' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கர

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் ‘கர’. விக்னேஷ் ராஜா ‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த இவர், இரண்டாவது படத்தில் தனுஷுடன் கைகோர்த்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.

மேலும் இப்படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், சுராஜ், பிரித்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ‘கர’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *