முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு… சிறகடிக்க ஆசை

முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு… சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை

இந்த சீரியலில் ஒருபக்கம் மனோஜ் விவாகரத்து பிரச்சனை, இன்னொரு பக்கம் சத்யா-ரேகா திருமண பரபரப்பு வேறு இருக்கிறது.

முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial June 30 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், பார்வதி வீட்டிற்கு ரோஹினி விஜயா இருவரும் வருகிறார்கள். ரோஹினி, விஜயாவிடம் மனோஜிற்காக நான் செலவு செய்த ரூ. 5 லட்சத்தை கொடுங்கள் நான் கண்டிப்பாக விவாகரத்திற்கு கையெழுத்து போடுகிறேன் என்கிறார்.

ஆனால் விஜயா, அவர் கூறியதை கேட்டு உனக்கு ரூ. 5 லட்சம் தரனுமா, அப்படியே போட்டேன்னா என அடிக்க செல்ல பார்வதி தடுக்கிறார். மேலும் மேலும் மோசமாக பேசிய விஜயாவிடம், ரோஹினியும் கோபமாக பேசி பதிலடி கொடுக்கிறார்.

முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial June 30 Episode

பணம் கொடுத்தால் விவாகரத்து கிடைக்கும், இல்லையெனில் நீங்கள் நீதிமன்றம் ஏறி இறங்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்கிறார். பின் வீட்டிற்கு வந்த விஜயா இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் கூறுகிறார், இந்த பிரச்சனையை மனோஜ் தான் சந்திக்க வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார்.

முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial June 30 Episode

அதைக்கேட்ட விஜயா, அவன் மட்டும் எப்படி இவ்வளவு பணத்தை ரெடி செய்ய முடியும் இவர்கள் இருவரும் (முத்து-மீனாவை காட்டி) வீட்டில் எந்த பிரச்சனையானாலும் முன்னே வந்து சரி செய்கிறார்கள். இவர்களிடம் கூறி எப்படியாவது பணம் ரெடி செய்ய சொல்லுங்கள் என கணவரிடம் கூறுகிறார்.

அண்ணாமலை, விளையாடுறியா மனோஜ் வாங்கிய கடனை ஏற்கெனவே முத்து தான் ஏற்றுக்கொண்டுள்ளான், இப்போது வேறா, கண்டிப்பாக முடியாது என்கிறார். முத்துவும் இந்த கடனை கட்டவே அவ்வளவு கஷ்டம், என்னால் முடியாது என்கிறார்.

முதன்முறையாக விஜயா கேட்டும் செய்ய முடியாது என கூறிய முத்து, மனோஜின் ஷாக்கிங் முடிவு... சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial June 30 Episode

நாளைய எபிசோடின் புரொமோவில், மனோஜ் என் கடனை யாரும் அடைக்க வேண்டாம், நானே ரெடி செய்துவிட்டேன் என்கிறார். தெரிந்த நண்பர்களிடம் கூறியிருக்கிறேன் என மனோஜ் கூற விஜயா, இந்த வார்த்தையை முத்து-மீனா சொன்னால் கூட நம்புவேன் என கூறுகிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *