வீடே எதிர்க்க ஜனனி-சக்திக்காக விசாலாட்சி செய்த அதிரடி, ஷாக்கில் ஈஸ்வரி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

வீடே எதிர்க்க ஜனனி-சக்திக்காக விசாலாட்சி செய்த அதிரடி, ஷாக்கில் ஈஸ்வரி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் இன்னும் கதறி அழுது வீடியோ மட்டும் தான் போடவில்லை.

ஆனால் புரொமோ. Preview வீடியோக்கள் எது வந்தாலும் இயக்குனர் ஏன் கதையை இப்படிகொண்டு செல்கிறார், ஜனனி கதாபாத்திரத்திற்கு அநியாயம் மட்டுமே செய்கிறார், வில்லன்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கிறார்.

கதையின் நாயகிகளை டம்மியாகவே காட்டிக்கொண்டு இருக்கிறார் என ஒவ்வொரு நாளும் புரொமோக்கள் கீழ் புலம்பி வருகிறார்கள்.

வீடே எதிர்க்க ஜனனி-சக்திக்காக விசாலாட்சி செய்த அதிரடி, ஷாக்கில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial June 30 Episode

புரொமோ

ரசிகர்கள் புலம்பல் இருக்கட்டும் நான் கதையை இப்படிதான் எடுப்பேன் என திருச்செல்வம் அவர்கள் கதையை வில்லன் பக்கம் ஜெயிப்பது போலவே காட்டிக்கொண்டு வருகிறார்.

இன்றைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த ஜனனியை கைது செய்ய போலீஸ் வருகிறார்கள், சுவாமிநாதன் இறந்ததில் கூட சந்தேகம் உள்ளது, உங்களை ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்கிறார்.

வீடே எதிர்க்க ஜனனி-சக்திக்காக விசாலாட்சி செய்த அதிரடி, ஷாக்கில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial June 30 Episode

சக்தி ஒருபக்கமாகவே பேசாதீர்கள், எனக்கு இவர்கள் மீது சந்தேகம் உள்ளது, இந்த ராணா மீது கூட உள்ளது என கூற ஈஸ்வரி நீங்கள் தவறு செய்துவிட்டு ஏன் மறைக்க பார்க்கிறீர்கள் என்கிறார்.

இப்படி பேசிக்கொள்ள விசாலாட்சி சட்டெனறு என்று மகன் சக்தி, மருமகள் ஜனனி இங்கே தான் இருப்பார்கள், நாங்கள் 3 பேரும் ஒருபக்கம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள் என்கிறார்.

அவர் கூறியதை கேட்டு ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி 3 பேரும் ஷாக் ஆகிறார்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *