முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் ராதிகாவின் தாய்கிழவி… சூப்பர் தகவல்

முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் ராதிகாவின் தாய்கிழவி… சூப்பர் தகவல்


தாய்கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தாய்கிழவி.

மதுரை பின்னணியில் பெண்கள் சுயமுன்னேற்றம் என்பது சேமிப்பில்தான் இருக்கிறது என்ற கருத்தை மையப்படுத்தி தயாரான இந்த கதைக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் ராதிகாவின் தாய்கிழவி... சூப்பர் தகவல் | Thaai Kizhavi Movie First Television Premiere

இந்த படத்திற்காக ராதிகா தனது லுக், நடை, பேச்சு என எல்லாவற்றையும் மாற்றி நடித்தார்.
இப்படம் 75 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 75 நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ. 90 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்ததாக தயாரிப்பு குழுவே அறிவித்தனர்.

தொலைக்காட்சி


2026ம் வருடத்தில் வெளியான படங்களில் மெகா பிளாக் பஸ்டர் படமாக தாய்கிழவி படம் அமைந்துள்ளது.

திரையரங்குகளில் வெற்றிப்பெற்ற இப்படம் முதன்முறையாக விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். விஜய் டிவியில் படம் ஒளிபரப்பாக போகும் அறிவிப்பை புரொமோவுடன் வெளியிட்டுள்ளனர். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *