மகுடம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகுடம்
தமிழ் சினிமாவில் இதுநாள்வரை ஹீரோவாக பட்டையை கிளப்பி வந்த விஷால், முதல்முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள திரைப்படம் மகுடம். இப்படத்தில் அவருடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் விஷால் பிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை இப்படம் எதிர்கொண்டது.
பாக்ஸ் ஆபிஸ்
வசூல்
ரீதியாகவும் மகுடம் திரைப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
இது விஷாலின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மிகக்குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






