பிரான்ஸில் “பொம்மை” திரைப்பட வெளியீடு! தேதி, நேரத்துடன் முழு விவரம்

இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் – பிரான்ஸ்
இனிய பெருமிதத்துடன் பிரான்சில் முதன்முறையாக வெளியிடுகிறது –
எங்கள் தேசத்தின் உண்மை நிலையை சமரசமின்றி வெளிப்படுத்திய திரைக்காவியம் “பொம்மை”.
📅 வெளியீட்டு நாள்: 10.05.2026
🕓 நேரம்: மாலை 17h15 மணி , 19.15 மணி என இருநேர காட்சிகள்.
📍 இடம்: Bobigny
Cinéma Alice Guy
24,rue Aretha Franklin 93000
Bobigny
(Métro Bobigny)
இந்த படம் வெறும் திரைக்கலைப் படைப்பு அல்ல.
அது நம்மை நிமிரவைக்கும் ஒரு குரல்,
நம்மை சிந்திக்க வைத்து வழிகாட்டும் ஒரு ஒளி.
ஒரு மணி முப்பது நிமிடங்களுக்குள்,
எங்கள் நிலத்தின் வெளித்தெரியாத வில்லங்கங்கள்,
நாம் காணாத்தயங்கும் அல்லது தவிர்க்கும் உண்மைகள் அனைத்தையும் புட்டுவைத்து,
“நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை நெஞ்சுக்குள் எழுப்பி விடைகளை விதைகளாக விதைத்து நிற்கிறது .
“பொம்மை” ஒரு கலைப்படைப்பு மட்டுமல்ல —
நாம் கடந்து வந்த துயரங்களையும்,
நாம் இன்னும் கடக்க வேண்டிய தூரங்களையும் தெளிவாகக் காட்டும் ஒரு சிந்தனை மருந்து.
இந்த வெளியீட்டின் முழு வருமானமும் எங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவிடப்படும்
என்பதை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் – பிரான்ஸ் உறுதியாக அறிவிக்கிறது.
வருக, சிந்தனையில் ஒன்றாகி செயலில் நின்று,
எங்கள் தேசத்தை மீட்டெடுப்போம்.
நன்றி.
இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் – பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:
- 06.68.81.63.62 ,
- 06.61.77.82.76,
- 06.99.73.22.05 ,
- 06.03.55.18.86,
- 06.98.58.19.12






