பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா?

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா?

நடிகை திரிஷா

கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக பயணித்து, 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா, ராம் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. மேலும், சித்தார்த்துடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க திரிஷா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திரிஷா – அசின் இடையே மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா? | Was There A Conflict Between Trisha And Asin

திரிஷா, அசின் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். இருவரும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றனர். ஆனால், நடிகை அசின் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். நடிகை திரிஷா தற்போது சிங்கிளாக இருந்தாலும் சினிமாவின் பீக்கில் இருக்கிறார்.

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா? | Was There A Conflict Between Trisha And Asin

மோதலுக்கான காரணம்?

திரிஷா – அசின் இருவரும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அப்போது பேச்சு இருந்தது. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அடுத்த படமான சிவகாசியில் அசின் விஜய்யுடன் நடித்தார். திரிஷா அளவுக்கு விஜய்யுடன் அதிக படங்களில் நடிகை அசினும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா? | Was There A Conflict Between Trisha And Asin

நடிகை அசின் பாலிவுட் பக்கம் சென்ற பிறகுதான் இவர்களுக்கு இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

திரிஷா விளக்கம்

இந்த நிலையில், அசினுடனான மோதல் குறித்து நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

“அசினுடன் எனக்கு மோதல் என்பது முற்றிலுமாக வதந்தியாகும். அசின் மட்டுமில்லை எந்த நடிகைகளுடனும் எனக்கு மோதல் வந்தது இல்லை. வர்ஷம் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருது வென்றேன். அந்த விழாவில்தான் முதல்முறையாக நான் அசினை நேரில் சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் வாழ்த்து தெரிவித்தார். எப்போதுமே எனக்கு அவருடன் எந்த சண்டையும் இருந்தது இல்லை”.

பிரபல நடிகைக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல்! விஜய்யுடன் நடித்ததுதான் காரணமா? | Was There A Conflict Between Trisha And Asin

“ஆனால் மீடியாக்கள் அதனை அப்படி உருவாக்கிவிட்டன. நாங்கள் ஒரே மாதிரியான படங்களில் நடித்திருக்கிறோம். விஜய்யுடன் நான் ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படத்தில் அசின் நடிப்பார். விஜய் மட்டுமில்லை சூர்யா, விக்ரமுடனும் அப்படித்தான். எதையுமே நான் பெர்சனலாக எடுத்துக்கொண்டது இல்லை. அவருடன் எனக்கு பெர்சனலாக காண்டாக்ட் கூட இல்லை. அவர் மிகவும் ப்ரொஃபஷ்னலாக இருப்பார்” என திரிஷா கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *