பிகில் படத்திற்காக இந்திரஜா ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?… அவரே கூறிய தகவல்

பிகில் படத்திற்காக இந்திரஜா ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?… அவரே கூறிய தகவல்


பிகில் படம்

அட்லீ-விஜய் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களுமே செம ஹிட். அந்த வரிசையில் இருவரின் கூட்டணியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிகில்.

கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண்கள் அணியின் கதையாகவும், விளையாட்டு துறையில் இருக்கும் சவால்கள் பற்றியும் இந்த படம் பேசியிருந்தது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தார்கள்.

பிகில் படத்திற்காக இந்திரஜா ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?... அவரே கூறிய தகவல் | Indraja Shares Her Salary For Bigil Movie

சம்பளம்

பெண்கள் அணியில் நடித்த நடிகைகளில் முக்கியமான ரோலில் நடித்தவர் தான் இந்திரஜா ஷங்கர். ரோபோ ஷங்கரின் மகளான இவர் விஜய்யின் பிகில் படம் மூலம் தான் சினிமாவில் முதன்முறையாக என்ட்ரி கொடுத்தார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து கூறியுள்ளார். பிகில் படத்துக்காக நான் 180 நாள் வேலை செய்தேன், அதாவது 6 மாதம்.

பிகில் படத்திற்காக இந்திரஜா ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?... அவரே கூறிய தகவல் | Indraja Shares Her Salary For Bigil Movie

டப்பிங் உள்பட எல்லா வேலையும் சேர்த்துதான் இந்த கணக்கு. இது எல்லாம் சேர்த்து எனக்கு கிடைத்த சம்பளம் ரூ. 3 லட்சம் தான்.

தற்போது கடைசியாக TN 2026 படத்தில் நான் ஒரே ஒரு நாள்தான் நடிச்சேன். அதுக்கு எனக்கு ரூ. 40,000 சம்பளம் கிடைச்சது என்று கூறியுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *