பாலன் திரை விமர்சனம்

பாலன் திரை விமர்சனம்


பாலன் திரைவிமர்சனம்

மஞ்சுமல் பாய்ஸ் என்ற சென்சேஷன் ஹிட் கொடுத்த இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் இரண்டாம் படைப்பாக வெளிவந்துள்ள பாலன் முந்தைய படம் போல் மேஜிக் செய்ததா? பார்ப்போம்.

பாலன் திரை விமர்சனம் | Balan Movie Review

கதைக்களம்



படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பர்சானா ஜெயிலில் இருந்து ரிலிஸ் ஆகிறார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார், இருவரும் வேலை தேடி தங்கள் அடையாளங்களை அழித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்கின்றனர்.


அப்படி செல்லும் இடமெல்லாம் பிரச்சனைகள் வர, வேறு வேறு இடம் என செல்கின்றனர். ஒரு வழியாக ஒரு பாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலை வருகிறது.

பாட்டியின் மகன் வெளியூரில் இருக்க இவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார்.


அதன் பின் அந்த ஆபத்து என்ன ஆனது, நாயகி பர்சானா யார், அவருக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன, இதிலிருந்து எல்லாம் மீண்டாரா என்பதே மீதிக்கதை.

பாலன் திரை விமர்சனம் | Balan Movie Review

படத்தை பற்றிய அலசல்



மலையாள சினிமாவில் சின்ன லைன்-யை வைத்து எப்படியெல்லாம் எடுக்கிறார்கள் என்ற வசனத்திற்கு நிரூபணம் செய்யும்படி மீண்டும் ஒரு படம் தான் இந்த பாலன்.


பெயரை மாற்றி மாற்றி ஊர் ஊராக சுற்றும் நாயகி பர்சானா எந்த ஒரு கலக்கமும் இல்லாமல் அவர் பேசும் பொய்கள் நடிப்பில் மிரட்டல், அட அவுங்க பெரியவங்க சொல்றத கேட்டு நடிப்பார்கள் என சொல்லலாம், பர்சனா மகனாக நடித்துள்ள சிறுவன் அவனும் அந்த பொய்களை உள்வாங்கி கொண்டு மற்றவர்களிடம் கொடுக்கும் ரியாக்ஸன் வார்த்தைகள் இல்லை விவரிக்க, சூப்பர்டா தம்பி.

பாலன் திரை விமர்சனம் | Balan Movie Review


அதிலும் ஒரு பாட்டி வீட்டில் வேலை செய்யும் போது அங்கு அந்த பாட்டி பேசும் வார்த்தைகள், அவர் கொடுக்கும் தைரியம், அவரோட சிறுவன் உரையாடும் ஜாலியான வசனங்கள் எல்லாமே நெகிழ்ச்சி.

படத்தின் முதல் பாதி அத்தனை குழப்பம், மர்மல் என சென்று இடைவேளையில் வைக்கும் காட்சி பதட்டத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. அதை தொடர்ந்து பர்சனா என்ன ஆவார், மகன் என்ன ஆனார் என்பதிலிருந்து இரண்டாம் பாதி தொடங்குகிறது.


சிறுவனின் எதிர்பாரத சந்திப்பு அவன் வாழ்க்கையை எங்கு கொண்டு செல்கிறது, அம்மாவை தேடி செல்ல, போலிஸிடமிருந்து தப்பிக்கும் சிறுவனால் போலிஸின் காதல் உடைய, அந்த போலிஸ் இந்த சிறுவனை ஒரு வழி பார்க்க வேண்டும் என கங்கனம் கட்ட, ஒரு ஈகோ மோதலாக படத்தின் இரண்டாம் பாதி மாறுகிறது.


முதல் பாதியில் இருந்த மர்மம், பதட்டம் இரண்டாம் பாதியில் அப்படியே வேறு திசைக்கு கதை செல்ல, பல இடங்களில் ஒரு சிலருக்கு பொறுமையை சோதிக்கும், அப்படியிருந்தும் அந்த கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அட சொல்ல வைத்துவிடுகிறது.

டெக்னிக்கலாக படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் டால் லெவல் தான்.


க்ளாப்ஸ்



நடிகர்களின் பங்களிப்பு முக்கியமாக அந்த சிறுவனின் நடிப்பு

படத்தின் முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ்

டெக்னிக்கல் ஒர்க்


பல்ப்ஸ்



இரண்டாம் பாதி பல இடங்களில் பொறுமையை சோதிக்கும், முக்கியமாக ஜனரஞ்சக சினிமா ரசிகர்களுக்கு


மொத்தத்தில் பாலன் மலையாள சினிமா தாண்டி இந்திய சினிமாவிலேயே முக்கிய இடம் பிடிப்பான்.


3.5/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *