பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை.. நீங்களே எதிர்பார்க்காத ஒருவர்
Popular actress entry in Pandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிதாக பிரபல சின்னத்திரை நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வும் ஒன்று. இந்த சீரியலில் தற்போதைய கதைக்களம்படி, சரவணனுக்கு நடக்கவிருந்த இரண்டாம் திருமணத்தை பாண்டியன் நிறுத்திவிட்டார். இதனால் கடும் கோபமடைந்த சரவணன், முதல் முறையாக தனது தந்தையை எதிர்த்து பேசினார். சரவணன் பேசிய பேச்சால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நான்தான் காரணம் என நினைத்து, கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் வீட்டை விட்டு நடுஇரவில் வெளியேறிவிட்டார். யாரிடமும் சொல்லாமல் மயில் வீட்டை விட்டு வெளியே சென்றதால், அவளை எப்படியாவது வீட்டிற்கு மீண்டும் அழைத்து வா என சரவணனிடம் பாண்டியன் சொல்கிறார். ஆனால், சரவணன் என்னால் முடியாது என்கிறார்.
புதிய என்ட்ரி
இன்றைய எபிசோடில் இவை அனைத்தும் நடக்க, சின்னத்திரை நடிகை ஸ்ரீ பிரியா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க வந்துள்ளார். இதுவரை அரசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சத்யா கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் சீரியலில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ஸ்ரீ பிரியா நடிக்க வந்துள்ளார்.
