பழம்பெரும் நடிகர் கிரி பாபு காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்


Veteran Actor Giri babu passed away: தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரான கிரி பாபு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருடைய வயது 83.


கிரி பாபு


ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் கிரி பாபு. இளம் வயதிலேயே நாடக கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். 1973-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜகமே மாயா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதலில் கதாநாயகனாக நடித்து வந்தாலும், பின் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பழம்பெரும் நடிகர் கிரி பாபு காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Veteran Telugu Actor Giri Babu Passed Away

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் இவர், இதுவரை 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து கிரி பாபு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகர் கிரி பாபு காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Veteran Telugu Actor Giri Babu Passed Away

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள கிரி பாபுவின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருக்கு ரகு பாபு மற்றும் போஸ் பாபு ஆகிய இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், ரகு பாபு என்பவர் தெலுங்கில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். கிரி பாபுவின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *