நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே என்ட்ரி கொடுத்து தனது சொந்த முயற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் விஜய்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலுமே விஜய் பெரிய இடத்தை பிடித்துவிட்டார்.
மக்களின் மீது வைத்த நம்பிக்கையில் அரசியலில் களமிறங்கி இப்போது CM ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார், அதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.
சம்பளம்
தனது முதல் படமான வெற்றிக்கு ரூ. 500 சம்பளம் வாங்க தொடங்கிய விஜய் கடைசிப் படமான ஜனநாயகன் படத்திற்காக ரூ. 220 முதல் ரூ. 275 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
தற்போது சினிமாவில் இருந்து முழுவதும் விலகி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
தமிழக முதலமைச்சரின் மாத ஊதியம் ரூ. 2,05,000 மட்டுமே, ஆண்டுக்கு ரூ. 24.6 லட்சமாம்.
சினிமாவில் வாங்கிய சம்பளத்தை விட விஜய்க்கு இது மிகவும் குறைவு தான் எனினும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.






