திடீரென மேடையில் ஏறி சூர்யா ரசிகர் செய்த செயல்.. கருப்பு பட விழாவில் அதிர்ச்சி!

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் எல்லோரும் தற்போது கருப்பு படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார்கள். வரும் 14ஆம் தேதி, அதாவது இந்த வாரம் வியாழக்கிழமை, கருப்பு படம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் ரிலீசாகி இருந்த கருப்பு ட்ரெய்லருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது. சூர்யா மற்றும் ஆர்ஜே பாலாஜி இருவரும் மோதிக்கொள்வது போல தான் கதை ட்ரெய்லரில் காட்டப்பட்டு இருந்தது.
படத்தின் புரமோஷனுக்காக இன்று ஐதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர். அதில் சூர்யா கார்த்தி ஆர்ஜே பாலாஜி என படக்குழுவினர் கலந்து கொண்டனர். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷா வரவில்லை.
ரசிகர் செய்த செயல்
நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மேடையில் இருக்கும் போது ரசிகர் ஒருவர் திடீரென மேலே ஏறி சூர்யாவின் காலை பிடித்துக் கொண்டார். அதை பார்த்து அதிர்ச்சியான பாதுகாவலர்கள் உடனடியாக வந்து அந்த நபரை பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஆனால் சூர்யா அவரை தள்ள வேண்டாம் என சொல்லி, அருகில் அழைத்து, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
Fan moment ❤️
A fan turns emotional with joy and takes a selfie with #Suriya at the #Veerabhadrudu pre-release event 📸#TFNExclusive #TeluguFilmNagar pic.twitter.com/9kUDvtGpJs
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 11, 2026






