டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்.. குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்


Director Actor Abishan jeevinth blessed with baby girl: இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு குழந்தை பிறந்துள்ளது. தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.



அபிஷன் ஜீவிந்த்



சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்திலேயே அவர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் எமோஷனலாக்கி இருப்பார். இதனால், இவர் விரைவில் ஹீரோவாக நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்.. குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் | Abishan Jeevinth Akkila Blessed With Baby Girl



அதன்பின், அபிஷன் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளியான திரைப்படம்தான் வித் லவ். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரின் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து பிக்காசோ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

தந்தையானார் அபிஷன்



டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் போது தனது காதலியிடம் திருமணம் செய்துகொள்வாயா என இயக்குநர் அபிஷன் கேட்டது இணையத்தில் படுவைரலானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்.. குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் | Abishan Jeevinth Akkila Blessed With Baby Girl



இந்த நிலையில், தற்போது அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளின் முகத்தை மறைத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அபிஷன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *