சந்தா நிச்சயதார்த்தம்.. நிலா எடுத்த முடிவு.. அய்யனார் துணை ப்ரோமோ

சந்தா நிச்சயதார்த்தம்.. நிலா எடுத்த முடிவு.. அய்யனார் துணை ப்ரோமோ


அய்யனார் துணை சீரியலில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்களின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.



அய்யனார் துணை



விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். இதில் தற்போது சேரனுக்கும் சந்தாவிற்கும் திருமணம் செய்து வைக்க சந்தா வீட்டில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேரன் - சந்தா நிச்சயதார்த்தம்.. நிலா எடுத்த முடிவு.. அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ | Ayyanar Thunai Serial Latest Promo Video

இதையடுத்து, ஒரே வாரத்தில் நிச்சயதார்த்தம் நடத்த வேண்டும் என முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் அன்று திருமணத்திற்கான தேதியை குறித்துவிடலாம் என சந்தாவின் தந்தை கூறியுள்ளார்.



நிலா எடுத்த முடிவு



நிச்சயதார்த்தத்திற்கு நம் தரப்பிலிருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக லிஸ்ட் போட வேண்டும் என நிலா கூறுகிறார். பின், நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாட்டை பெண் வீட்டார் செய்துவிடுவார்கள். ஆனால், சந்தாவிற்கு நாம் மோதிரம் எடுக்க வேண்டும். சாதாரணமாக இல்லாமல், சிறிய அளவில் வைரக்கல் பதித்த மோதிரம் எடுக்க வேண்டும். அதற்கு ரூ. 50,000 செலவாகும் என நிலா கூறுகிறார்.

சேரன் - சந்தா நிச்சயதார்த்தம்.. நிலா எடுத்த முடிவு.. அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ | Ayyanar Thunai Serial Latest Promo Video

இதை கேட்டவுடன் சேரன் ‘ஒரு நிமிஷம் இரு பா’ என நிலாவிடம் கூறிவிட்டு அறைக்குள் செல்கிறார். அனைவரும் வெளியே காத்திருக்கிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *