கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம்… கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள், அய்யனார் துணை
அய்யனார் துணை
கடந்த சில வாரங்களாக அய்யனார் துணை சீரியல் ரசிகர்கள் பதற்றத்திலேயே வைத்துள்ளனர்.
காரணம் சில முறை நின்றுபோன சேரன் திருமணம் இந்த முறையாவது நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்க இருந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கார்த்திகா, சேரனை காதலித்தேன் என நிறைய விஷயங்களை பகிர பிரச்சனையாகி திருமணம் நிற்கும் அளவிற்கு சென்றது. பின் எப்படியோ சேரனின் காதலும் ஜெயித்தது.
புரொமோ
சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நாளைய எபிசோடில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் திருமணம் முடித்த ஜோடியை வாழ்த்த விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் நடிகர்கள், ஒன்னா இருக்க கத்துக்கணும் நடிகர்கள் எல்லாம் வந்துள்ளனர். இதோ புரொமோ,
