கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டேன்.. ஆனால் ஜெயிலர் 2ல் நடித்தது ஏன்: விஜய் சேதுபதி பதில்

நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின.
அதனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்துள்ளார்.
காரணம்
அதற்கான காரணத்தை தற்போது ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
“நான் cameo நடிப்பதை நிப்பாட்டிட்டேன். ஜெயிலர் 2ல் பண்ணி இருக்கேன். ரஜினி சார் கூட நடிக்கணும் என்ற ஆசைக்காக அதை பண்ணி இருக்கேன். அது என்னடைய சாய்ஸ்.
ரஜினி சார் உடன் போஸ்டரில் போட்டாலும் நம்மை யாரும் கவனிக்க மாட்டாங்க. ஆனால் மற்ற படங்களில் என் போட்டோவை போஸ்டரில் போடுவது என் மற்ற படங்களை பாதிக்கிறது. அதனால் தான் cameo நடிப்பதில்லை” என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.






