குடும்பத்துடன் அஜித் திருமண நாள் கொண்டாட்டம்! அழகிய புகைப்படங்கள்

அஜித் குமார் நடிகர் என்பதை தாண்டி முழு நேர கார் ரேஸர் ஆகிவிட்டார். அதில் வெற்றிகளையும் அவரது அணி பெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித் தேர்தலிலும் முதல் ஆளாக சென்று வாக்களித்து இருந்தார். அடுத்த படத்தை அவர் இன்னும் தொடங்காத நிலையில் தற்போது குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
திருமண நாள்
தற்போது அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தங்கள் 26வது திருமண நாளை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
அழகிய புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.






