கிளைமேக்ஸ் எட்டிய சிந்து பைரவி, புதிய தொடரின் நேரம் மாற்றம்… முழு விவரம்

கிளைமேக்ஸ் எட்டிய சிந்து பைரவி, புதிய தொடரின் நேரம் மாற்றம்… முழு விவரம்


சிந்துபைரவி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் சிந்துபைரவி.

இதில் பவித்ரா, திரவியம், ஆர்த்தி சுபாஷ் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய ஜோடிகளாக நடித்தார்கள்.
A Tele Factory தயாரித்துள்ள இந்த சீரியல் மலையாளத்தில் சிந்துபைரவி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது கிளைமேக்ஸ் எட்டிவிட்டது. விருப்பமே இல்லாமல் கல்யாண பந்தத்தில் இணைந்த இரண்டு ஜோடிகள் பல போராட்டங்களுக்கு பிறகு இணைவதாக காட்டப்பட்டு இந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டது.

கிளைமேக்ஸ் எட்டிய சிந்து பைரவி, புதிய தொடரின் நேரம் மாற்றம்... முழு விவரம் | Vijay Tv Serial New Time Change Alert

மாற்றம்


சிந்துபைரவி சீரியல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் மாலை 6 மணிக்கு எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் யோசித்து வந்தார்கள், இப்போது தகவல் வந்துள்ளது.

அதாவது சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட காதல் காதல் காதல் என்ற சீரியல் தான் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *