கர்ணாவை குத்த வந்த மர்மநபர்.. இந்துவிடம் சத்தியம் செய்த கர்ணா! சின்னஞ்சிறு கிளியே சீரியலில் பரபரப்பு!

சின்னஞ்சிறு கிளியே
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே.
இன்றைய எபிசோடில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன.
கர்ணாவுக்கு டீ பாய் மீது ஏற்கனவே சந்தேகம் இருந்த நிலையில், அவன் குறித்து உண்மையை அறிய பாண்டிக்கு போன் செய்கிறான்.
அப்போது, “இன்று அந்த டீ பாய் வேலைக்கே வரவில்லை” என்று பாண்டி சொன்னதும், கர்ணாவின் சந்தேகம் உறுதியாகிறது. அப்படியானால் தன்னிடம் இருப்பவன் யார்? என்ற கேள்வி அவனை துரத்துகிறது.
இதையடுத்து கர்ணா நேரடியாக அந்த நபரிடம் விசாரிக்க, திடீரென அவன் கத்தியை எடுத்து கர்ணாவை குத்த முயற்சி செய்கிறான். இந்த சம்பவத்தை பார்த்த இந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.
ஆனால் கர்ணா அவனை பிடித்து விசாரிக்க, அவர் கூறும் உண்மை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
“என் அப்பாவின் மரணத்திற்கு காரணம் கர்ணாதான்!” என்று அந்த நபர் குற்றம் சாட்ட, இந்துவின் உலகமே தலைகீழாகிறது.
கிருபாவிடம் வாங்கிய கடன், அதற்காக நடந்த மிரட்டல்கள் மற்றும் அதன் பின்னணியில் நடந்த சோக சம்பவங்கள் குறித்து அறிந்த இந்து மனமுடைந்து போகிறாள்.
“உங்க அப்பாவுக்கு இப்படிச் நடந்திருந்தா நீங்க அமைதியா இருப்பீங்களா?” என்ற கேள்வி இந்துவின் மனதை உலுக்க, உடனே கர்ணாவிடம் இனிமேல் யாரிடமும் கந்துவட்டி வசூலிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.
இந்துவின் கண்ணீருக்கு கர்ணா என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பது பெரிய கேள்வியாக மாறுகிறது.
மறுபுறம், வீட்டில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் விஷ்வா, வட்டி வசூலிக்க கர்ணாவுடன் செல்ல விரும்புகிறார்.
ஆனால் கிருபா, “நாம் எஜமானர்கள்… வேலை வாங்கணுமே தவிர வேலை செய்யக் கூடாது. அதற்காகத்தான் கர்ணா இருக்கான்” என்று கூறுவதோடு, கர்ணாவை அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார்.
இந்து வாங்கிய சத்தியத்தை கர்ணா காப்பாற்றுவானா? கர்ணாவின் வாழ்க்கையில் அடுத்த திருப்பம் என்ன?
உணர்ச்சிகளும், அதிரடியும் கலந்த இந்த பரபரப்பான எபிசோடை இன்று இரவு 7 மணிக்கு Zee தமிழில் காண தவறாதீர்கள்!






