ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்


தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் திவாகரன் ஜெயந்தியை ஓடி ஓடி கவனிக்க கிருபா அதை பார்த்து கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கிருபா ஜெயந்திக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு செய்ய வீட்டில் அனைவரும் ஆச்சரியமும் குழப்பமும் அடைகின்றனர். திவாகரனின் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்த புவனா மட்டும் செம கடுப்பில் இருக்கிறாள்.

ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் | Chinnan Siru Kiliye Today Episode 297

பிறகு திவாகரன் ரூமுக்கு சென்று ஜெயந்தியின் துணிகளை எடுத்துச் சென்று துவைக்க கர்ணாவும் இந்துவும் இதை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கின்றனர். கர்ணா சிரிக்க இந்து இப்ப எதுக்கு சிரிக்கிற என்று கேட்க முரட்டுத்தனமா இருக்குங்க ரொமான்டிக்கா மாறுனா இப்படித்தான் இருப்பாங்க போல என்று இந்து மீது கை போட அவள் அவனை முறைக்க கையை எடுத்து விடுகிறான்.


அடுத்ததாக திவாகரன் ஜெயந்திக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக சொல்லி அழைத்துச் செல்ல இங்கே கர்ணா இந்துவுக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக ரூமுக்கு அழைத்து வருகிறான். புவனா ரூமுக்குள் என்ன நடக்கிறது என மறைந்து பார்க்க இதை கவனித்த இந்த காலுக்கு போட்டு விடு என காலை காட்ட கர்ணா நெயில் பாலிஷ் போட்டு விட புவனா கடுப்பாகிறாள்.

[M5IC5P ]

அதைத்தொடர்ந்து திவாகரன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஜெயந்தி ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்க அவளை அழைத்து கொண்டு கடைக்கு செல்கிறான். திவாகரனுக்காக தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த பாலை விஷ்வா குடித்து தூங்கி விடுகிறான்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? 24 மணி நேரம் முடிந்தால் திவாகரனின் மாற்றம் எப்படி இருக்க போகிறது? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *