எனக்கும் அவருக்கும் 30 வயது வித்தியாசம்.. பிரபல நடிகருடன் நடித்தது குறித்து நடிகை மிருணாள் தாகூர் வருத்தம்

மிருணாள் தாகூர்
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதை தொடர்ந்து Hi நானா படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Dacoit திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை மிருணாள் தாகூர் அதிகமாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவியாக மிருணாள் தாகூருக்கும், மனைவியிடம் இருந்து பிரிந்து வாழும் நபராக அஜய் தேவ்கனுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், நட்பு குறித்துதான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நடிகை மிருணாள் தாகூரின் முன்னாள் கணவராக பாலிவுட் மூத்த நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார்.
மிருணாள் வருத்தம்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து மிருணாள் தாகூர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “அந்த படத்தில் எனக்கு கணவராக சீனியர் ஒருவரைத்தான் ( சங்கி பாண்டே – வயது 63) தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், எனக்கும் அவருக்கும் கிட்டதட்ட 30 வயது வித்தியாசம். இது பற்றிய தகவல் எதையும் எனக்கு படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஆனாலும் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தினால் எந்த வித இடைஞ்சலும் செய்யாமல் அந்த படத்தில் நடித்தேன்” என கூறினார்.






