அரசி கொடுத்த சர்ப்ரைஸ்.. ராமேஸ்வரம் வந்து இறங்கிய சாமந்தி


சாமந்தி

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அர்ஜுன் சாமந்தியை ராமேஸ்வரம் அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அரசி கொடுத்த சர்ப்ரைஸ்.. ராமேஸ்வரம் வந்து இறங்கிய சாமந்தி - சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Samanthi Serial Latest Episode



அதாவது பார்வதி ஆரத்தி உடன் தயாராக இருக்க அரசி பார்வதி என்று அழைத்ததும் ஆரத்தி எடுக்க இவர்கள் அனைவரும் கிளம்ப தயாராகின்றனர்.

ரோஜா எங்கே என்று அரசி கேட்க ஆதவ் போகும் வழியில் பிக்கப் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறான்.

அடுத்ததாக கிளம்பும்போது வண்டியை நிறுத்தும் அரசி நீ வா என்று சாமந்தி பார்த்து கை காட்ட சாமந்தி சந்தோஷப்பட்டு இதோ வரேன் மா என்று சந்தோஷத்தோடு தனது அம்மாவுக்கு கண்ணில் ஜாடை காட்டி விட்டு கிளம்பி செல்கிறாள்.



இதைத் தொடர்ந்து இவர்கள் எல்லோரும் ராமேஸ்வரம் வந்து இறங்க ஊர்க்காரர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். பிறகு சாமந்தி ராஜா ராணி போட்டோவை எடுத்துக் கொண்டு அப்பா சொன்ன இடத்திற்கு யாருக்கும் தெரியாமல் கிளம்பி செல்கிறாள்.

அர்ஜுன் இவளை தொடர்ந்து வர சாமந்தி மாட்டிக்கிட்டோம் என பதறுகிறாள்.

பிறகு சாமந்தி கடைக்கு செல்வதாக சொல்லி சமாளிக்க அர்ஜுன் நானும் வரேன் என அவளுடன் செல்கிறான். ஒரு வளையல் கடையை பார்க்க இந்த வளையல் கடையில் வளையல் போட்டால் நல்லது நடக்கும் என்று சொல்கின்றனர்.

பிறகு அர்ஜுன் சாமந்தியை அழைத்து சென்று வளையல் வாங்கி அவளுக்கு போட்டு விடுகிறான்.

பிறகு சாமந்தி மீண்டும் அங்கிருந்து நடக்க அர்ஜுனை காணவில்லை என திரும்பி பார்க்க அவன் வலம்புரி சங்கு ஒன்றை வாங்கி அதை ஊத தெரியாமல் நிற்க சாமந்தி சங்கை வாங்கி எப்படி ஊத வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறாள்.



இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *