விஜய் மிஸ் செய்த 3 படங்கள்.. இயக்குனர் லிங்குசாமி சொன்ன தகவல்

விஜய் மிஸ் செய்த 3 படங்கள்.. இயக்குனர் லிங்குசாமி சொன்ன தகவல்


இயக்குனர் லிங்குசாமி தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தான் இதற்கு முன் விஜய்க்கு கதை சொன்னபோது நடந்த சம்பவம் பற்றி விவரித்து இருக்கிறார்.

ரன், சண்டக்கோழி ஆகிய படத்தின் கதைகளை முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம் அவர். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் வேறு ஹீரோ வைத்து எடுத்ததாக லிங்குசாமி கூறி இருக்கிறார்.

விஜய் மிஸ் செய்த 3 படங்கள்.. இயக்குனர் லிங்குசாமி சொன்ன தகவல் | Lingusamy Reveal Movie Vijay Missed Run

மிஸ் செய்த படங்கள்

ரன் பட கதை கேட்டுவிட்டு, அந்த மாதிரி கதை இப்போது விஜய்க்கு வேண்டாம் என கூறினாராம். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தின் கதையை விஜய்யே கேட்டாராம்.

பாதி கதையை கேட்டுவிட்டு, இரண்டாம் பாதி கதை கேட்காமலேயே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ராஜ்கிரண் ரோல் வந்தபிறகு தனக்கு அது செட் ஆகாது என கூறி விட்டாராம் அவர்.

ஆனால் படம் வெளியாகி ஹிட் ஆன பிறகு ஒரு பார்ட்டியில் விஜய் லிங்குசாமியை சந்தித்தாராம். படம் சூப்பராக இருந்ததாக வாழ்த்து கூறினாராம். ‘நீங்க தான் மீதி பாதி கதையை கேட்கவே இல்லையே’ என அந்த நேரத்தில் காட்டமாக பதில் சொன்னாராம் லிங்குசாமி.

அதை தொடர்ந்து வேட்டை படமும் விஜய்க்காக தான் நான் எழுதினேன் என லிங்குசாமி கூறி இருக்கிறார்.
 

விஜய் மிஸ் செய்த 3 படங்கள்.. இயக்குனர் லிங்குசாமி சொன்ன தகவல் | Lingusamy Reveal Movie Vijay Missed Run


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *