சீன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Scene movie 23 days box office: சீன் திரைப்படம் வெளியாகி 23 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சீன்
தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் இந்த மாதம் வெளியான சீன்திரைப்படமும் இணைந்துள்ளது. இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லீன், ஆனந்த்ராஜ், லால் ஆகியோர் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான சீன் திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டையை முதல் நாளிலிருந்து நடத்தி வருகிறது. கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் என தொடர்ந்து ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களை கொடுத்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
23 நாட்கள் வசூல்
இந்த நிலையில், 23 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள சீன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23 நாட்களில் இப்படம் ரூ. 279 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 23 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
