Hexed (animation): திரை விமர்சனம்


Moana 2 திரைப்படத்தில் இணை-இயக்குநராக பணியாற்றிய ஜேசன் ஹேண்ட் மற்றும் ஃபான் வீரசுந்தொர்ன் சேர்ந்து இயக்கியிருக்கும் Hexed அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பாப்போம் வாங்க.

Hexed (animation): திரை விமர்சனம் | Hexed Movie Review

கதைக்களம்




Massachusetts நகரில் ஆலிஸ் டோ தனது மகள் பில்லி டோவுடன் வசித்து வருகிறார். கைக்குழந்தையாக இருக்கும் பில்லியிடம் மந்திர சக்தி இருப்பதை அறிந்து காகங்களை கடத்த வருகின்றன.




அவற்றிடம் இருந்து மகளைக் காப்பாற்றும் ஆலிஸ், மந்திர சக்தியை பயன்படுத்தக் கூடாது என அவளுக்கு தாயத்து ஒன்றை கட்டிவிடுகிறார்.


பில்லி சிறுமியாக வளர்ந்த பிறகு அந்த தாயத்து எதேச்சையாக கழன்றுவிட, தனக்கு மந்திர சக்தி இருப்பதை அறிந்து மகிழ்கிறாள்.




அவளது அறையில் திடீரென ஒரு Portal திறக்க, தனது அம்மாவுக்கு தெரியாமல் பில்லி உள்ளே செல்கிறார்.


அங்கு தனது பறக்கும் சக்தியை வெளிப்படுத்தி அவள் சில விஷயங்களை செய்ய, அவளை கவனிக்கும் காவலர்கள் கைது செய்ய முயற்சிக்கின்றனர்.




அப்போது ஆலிஸ் அங்கு வந்து மகளைக் காப்பாற்றுகிறார். அதன் பின்னர் சில உண்மைகள் தெரிந்து பில்லி ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைகிறாள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்




தாய்லாந்து இயக்குநர் ஃபான் வீரசுந்தொர்ன் மற்றும் ஜேசன் ஹேண்ட் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.


குழந்தைகளை கவரும்படியான பல காமெடி காட்சிகள் படத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெரியவர்களை சிரிக்க வைக்கும்.




குறிப்பாக ஆந்தையை சுதந்திரமாக பறக்க விட்டது ஒரு தப்பா என்று பில்லி கேட்க, அது கூண்டிலிருந்து பறந்ததால் கரெண்ட் கம்பியில் சிக்கி இறந்தது என்று ஒரு கதாபாத்திரம் கோக்ரா குழந்தை பார்வையாளர்கள் இடையே குபீர் சிரிப்பு.




க்ரும்சுக் என்ற மந்திர சக்திகள் கொண்ட பூனை, ஆந்தை, விசித்திர ஜந்துகள் செய்யும் சேட்டைகள் என குழந்தைகளுக்கு பல ஆச்சரியங்களை தரும் வகையில் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Hexe உலகிற்கு ராணியாக இருக்கும் பெண்ணின் பின்னணி செம ட்விஸ்ட்.

அவர் செய்யும் விஷயங்கள், திட்டங்கள் எல்லாம் வியக்க வைக்கின்றன.


சேசிங், சண்டைக்காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி உள்ளன. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்வதால் படம் முழுக்க என்ஜாய்மென்ட்தான்.


பில்லியின் அப்பா யார் என்றே தெரியாதது, ஒரே மாதிரியான ட்விஸ்ட் போன்ற ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.




பெமினிஸத்தை தூக்கிப் பிடிப்பதுபோல் முழுக்க பெண் கதாபாத்திரங்கள் ஆதிக்கம் செலுத்துவதுபோல் இருந்தது ஒரு உறுத்தல்.


அனிமேஷன் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. பின்னணி இசையும் சிறப்பு. பின்னணி குரல்கொடுத்த கலைஞர்கள், படத்தொகுப்பாளர்கள் ஜெர்மி மில்டன், கிளார் நைட் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.

க்ளாப்ஸ்




  • பேண்டஸி கதை



  • திரைக்கதை



  • குழந்தைகளை கவரும் காட்சிகள்



  • மேக்கிங்



  • நகைச்சுவை காட்சிகள்




பல்ப்ஸ்




  • கிளைமேக்சை இழுத்தது போன்ற உணர்வு


  • ஒரு சில லாஜிக் மிஸ்டேக்ஸ்



மொத்தத்தில் இந்த Hexed குழந்தைகள் கொண்டாடும் உலகம். கண்டிப்பாக குட்டீஸுடன் சேர்ந்து அனைவரும் ரசிக்கலாம்.

Hexed (animation): திரை விமர்சனம் | Hexed Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *