Cosmic Samson (மலையாளம்) திரை விமர்சனம்


Cosmic Samson

Abhijith இயக்கத்தில் சந்தீப் ப்ரதீப் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கான்செப்ட் மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த காஸ்மிக் சாம்சன் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

Cosmic Samson (மலையாளம்) திரை விமர்சனம் | Cosmic Samson Malayalam Movie Review

கதைக்களம்

உத்தரபிரதேத்தில் ஒரு கும்பல் கொள்ளையடித்து போலிஸாரை கொன்று தப்பிகிறது, அதே நேரத்தில் கேரளாவில் சந்தீப் பெரிய ரைட்டர் ஆக வேண்டும் என தான் எழுதிய கதையை பல இயக்குனர்களிடம் கொடுக்கிறார்.



எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருக்க சந்தீப் எழுதிய கதை அல்போன்ஸ் புத்திரன் ஓகே செய்து படம் எடுக்கலாம் என்று செல்லும் போது, சந்தீப் கதையை வேறு ஒரு இயக்குனர் அவருக்கே தெரியாமல் இயக்குகிறார்.

Cosmic Samson (மலையாளம்) திரை விமர்சனம் | Cosmic Samson Malayalam Movie Review



இதனால் வாழ்க்கையை வெறுத்த சந்தீப் இனி வாழ்ந்து என்ன என விரக்தியில் மாடியில் இருந்து கீழே குதிக்க, அவர் கீழே விழாவில் அந்தரத்தில் மிதக்கிறார், எப்படி என்று பார்த்தால் சந்தீப் சமீபத்தில் வாங்கிய ஷு தான் காரணம்.



சூப்பர் ஷு கிடைத்ததும் சந்தீப் தன் புட் டெலிவெரி வேலைக்கு பயன்படுத்த, அந்த நேரத்தில் அந்த கொள்ளை கும்பல் கேரளா வந்து ஒரு வீட்டை கொள்ளையடிக்க, அந்த வீட்டிற்கு சந்தீப் புட் டெலிவரி செய்ய வர, பிறகு இவர்களுக்கான யுத்தம் தொடங்க ? சந்தீப் இந்த கும்பலை எப்படி பிடித்தார் என்பதே மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்



சந்தீப் மலையாள சினிமாவிற்கு ஒரு பக்கம் நஸ்லீன் என்றால் மறுப்பக்கம் இவர் என்று எதிர்கால மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கின்றார், அதிலும் ஒன்றுமே கிடைக்காத விரக்தி, பிறகு ஷு கிடைத்ததும் வரும் மாற்றம், அதை தொடர்ந்து வரும் பெரும் பொறுப்பு என அனைத்திலும் சந்தீப் தூள் கிளப்பியுள்ளார்.



சூப்பர் ஹீரோ படம் என்றாலே பல வகை உள்ளது, உடலில் ஏற்படும் மாற்றம் ஸ்பைடர் மேன் போல், இன்னொன்று ஏதாவது பொருள் கிடைக்கும் அதவாது அயன் மேன் போல், காஸ்மிக் சாம்சன் இதில் இரண்டாவது ரகம், ஷு கிடைக்கிறது, ஆனால் அந்த ஷு ஒர்க் ஆக தேவைப்படும் பொருள் அதுவும் 15 நிமிஷம் மட்டுமே வேலை செய்யும் என கதைக்காக பல ரூல்ஸ் வைத்துள்ளனர்.

Cosmic Samson (மலையாளம்) திரை விமர்சனம் | Cosmic Samson Malayalam Movie Review



படத்தின் முதல் பாதி இவருக்கு இந்த ஷு கிடைக்கிறது அதை வைத்து அவர் செய்யும் விஷயங்கள் எதுவுமே அழுத்தமாக இல்லை, எதோ ஜாலியாக இருந்தால் போதும் என்றே நினைத்துவிட்டார்கள் போல, அதனாலேயே நமக்கும் பெரியளவிற்கு இந்த சூப்பர் ஹீரோவுடன் ஒன்ற முடியவில்லை.



இடைவேளையில் தான் ஹீரோக்கு நெருக்கமான ஒரு நபருக்கு ஆபத்து வர நமக்கும் படபடப்பு தொற்றுகிறது, ஆனால் அதையும் பெரியளவிற்கு ஆடியன்ஸிடம் கடத்த முடியவில்லை, ஆனாலும் போர் அடிக்ககூடாது அந்த நோக்கத்தில் மட்டுமே எடுத்துள்ளனர், அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.




படத்தின் முதல் பாதி ஜாலியாக செல்ல இரண்டாம் பாதி தான் கதைக்களத்திற்கு செல்கின்றது, ஆனால் சூப்பர் ஹீரோ படம் என்றாலே பொது மக்களுக்கு போராடுவது போல் இல்லாமல் சொந்த குடும்பத்துகாக என காட்டியது யுனிக் என்றாலும், இதில் சூப்பர் ஹீரோ கான்செப்ட் இல்லாமலே எடுத்திருக்கலாம், நம்ம மாஸ் ஹீரோக்கள் இதை தானே செய்கின்றனர் என தோன்றுகிறது.



டெக்னிக்கலாக இசை, ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் எல்லாமே தரம் தான்.




க்ளாப்ஸ்




சந்தீப் பெர்ப்பாமன்ஸ்


சண்டை காட்சிகள், படத்தின் இரண்டாம் பாதி.


இசை, ஒளிப்பதிவு



பல்ப்ஸ்




படத்தின் முதல் பாதி இடைவேளை வரை கதைக்குள் செல்லாமல் எங்கெங்கோ போகிறது.


அந்த ஷு குறித்த டீடெய்ல் எதுவும் பெரிதாக சொல்லாமல் போனது.



மொத்தத்தில் காஸ்மிக் சாம்சன் தூக்கி கொண்டாட தருணம் இருந்தும் ஒரு சில காரணங்களால் தவறவிட்டுள்ளனர், ஆனாலும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.



2.75/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *