The Hunger Games: Sunrise on the Reaping


ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள தி ஹங்கர் கேம்ஸ்: சன்ரைஸ் ஆன் தி ரீப்பிங் அதனை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review

கதைக்களம்




தனது அம்மா, தம்பியுடன் பனேம்-யின் டிஸ்டிரிக் 12-யில் ஹேமிட்ச் அபெர்னாத்தி வசித்து வருகிறார்.


கோவி என்ற இசைக்குழுவின் உறுப்பினரான லெனோர் டோவும், ஹேமிட்ச்சும் காதலித்து வருகின்றனர்.




இந்த சூழலில் ஹங்கர் கேம்ஸ் 50வது ஆண்டுவிழாவை எட்டியுள்ளது. அதற்காக ஒவ்வொரு டிஸ்டிரிக்கில் இருந்தும் வழக்கத்திற்கு மாறாக நான்கு போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடும் இந்த போட்டியில் பங்கேற்க பலரும் அஞ்சும் சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட உட்பைன் சான்ஸ் தனது பெயர் அறிவிக்கப்பட்டதும் தப்பித்து ஓட முயல சுடப்படுகிறார்.




அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் காதலிக்காக கோபமடைந்த ஹேமிட்ச், தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல் சித்தரிக்கப்பட்டு தேர்வாகிறார்.


அவருடன் வையட் கல்லோவ் (பென் வாங்), மேசிலீ டோனர் (மெக்கென்னா கிரேஸ்), சிறுமி லூயெல்லா மெக்காய் (மோலி மெக்கான்) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review




அதேபோல் டிஸ்ட்ரிக் 1 முதல் 11 வரை நிறைய பேர் ஹங்கர் கேம்ஸ் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பந்தய பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.


கேபிட்டலில் நடக்கும் மரியாதை அணிவகுப்பில் வீசப்பட்ட வண்ண ஒளிக்கீற்றுகள் குதிரைகளை மிரளவைப்பதால் அவை சிதறி ஓடுகின்றன.




அதில் படுகாயமடையும் லூயெல்லா இறந்துவிட்டதால் கதறி அழும் ஹேமிட்ச், ஜனாதிபதி ஸ்னோவை ஏளனமாக பார்த்து பாராட்டுவதுபோல் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.


அதனைத் தொடர்ந்து ஹெவன்ஸ்பீயின் குடும்ப எஸ்டேட்டிற்கு ஹேமிட்ச் அழைத்துச் செல்லப்படுகிறார்.

அங்கு ஸ்னோ அவரை சந்தித்து விளையாட்டுப் போட்டி குறித்து அச்சுறுத்தல் செய்கிறார்.


மேலும், லூயெல்லாவிற்கு பதிலாக போதை மருந்து கொடுக்கப்பட்ட உருவ ஒற்றுமையில் உள்ள மற்றொரு சிறுமி, ஹங்கர் கேம்ஸில் பங்கேற்க போகிறாள் என்றுக் கூறி ஹேமிட்ச்சிற்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறாள்.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review




அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஹேமிட்ச், ஹங்கர் கேம்ஸ் போட்டியில் தனது டிஸ்டிரிக் போட்டியாளர்களை காப்பாற்றி, தன்னையும் தற்காத்துக் கொண்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்




தி ஹங்கர் கேம்ஸ் சீரிஸின் 6வது படமாகவும், முன்கதையாகவும் இந்த சன்ரைஸ் ஆன் தி ரீப்பிங் வெளியாகியுள்ளது.


கடந்த பாகத்தை இயக்கிய ஃபிரான்சிஸ் லாரன்ஸ் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

பில்லி ரே, மைக்கேல் லெஸ்லி ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.




ஜோசப் ஜடாவின் குடும்பம் மற்றும் காதலி லேனோர் சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகள் மெலோ டிராமாவாக செல்கின்றன.


அதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் தேர்தெடுக்கப்படும் காட்சி ஷாக் கொடுக்க, வசனங்களாகவே காட்சிகள் நகர்கின்றன.




ஹங்கர் கேம்ஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு அது ஒரு குறையாக தோன்றாது, என்றாலும் புதிதாக இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு சலிப்பாக தோன்றலாம்.


கதாபாத்திரங்கள் அலங்கரிக்கப்படும் காட்சிகள், செட்கள் எல்லாம் கண்களுக்கு குளிர்ச்சியாக விருந்தளிக்கின்றன.


போட்டி ஆரம்பமானதும் படம் வேகமெடுக்கிறது.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிலர் ஓடினாலும், சிலர் வேட்டையாட துடுப்பது மனிதர்களின் பல்வேறு குணங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன.


ஹங்கர் கேம்ஸில் நடக்கும் போராட்டங்கள் பரபரப்பாக உள்ளன.

எங்கு என்ன ட்ராப் இருக்கும் என்ற பயத்தையும் நமக்கு காட்சிகள் கடத்துகின்றன.


நடிகர்களைப் பொறுத்தவரை ஹீரோ ஜோசப் ஜடா மிகச் சரியான தேர்வு. பயம், ஆற்றாமை என பல எக்ஸ்பிரஷன்களை காட்டுகிறார். சண்டைக்காட்சிகளில் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார்.



ஹீரோயின் கதாபாத்திரம் சிறுது நேரம் வந்தாலும் நிறைவாக அமைந்துள்ளது. காதலன் கையால் சாகும் காட்சி நம்மை கண்கலங்க வைக்கும்.


வில்லன்கள் கடந்த பாகங்களைப் போலவே பயமுறுத்துகிறார்கள்.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review

கிளைமேக்ஸ் சரியான் ட்ரிபியூட்.


டெக்னிக்கலாக படம் மிரட்டியுள்ளது. கிராஃபிக்ஸ் காட்சிகள் கண்களுக்கு விருந்து. பின்னணி இசை படத்துடன் ஒன்ற உதவுகிறது.


ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் வுடி ஹாரல்சனின் கேமியோவுக்கு திரையரங்களில் விசில் பார்க்கிறது.

க்ளாப்ஸ்




  • நடிகர்களின் பங்களிப்பு



  • கிராஃபிக்ஸ் காட்சிகள்



  • ஹீரோவின் சாகசங்கள்



  • பின்னணி இசை




பல்ப்ஸ்




  • நீண்ட நேரம் வசனமாகவே செல்லும் சில காட்சிகள் புதிதாகபார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்



மொத்தத்தில் இந்த தி ஹங்கர் கேம்ஸ்: சன்ரைஸ் ஆன் தி ரீப்பிங் ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

The Hunger Games: Sunrise on the Reaping - திரை விமர்சனம் | The Hunger Games Sunrise On The Reaping Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *