விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் தொடர்.. எந்த நேரத்தில் தெரியுமா?


Heart beat web series in Vijay tv: ஹார்ட் பீட் வெப் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

ஹார்ட் பீட்


ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய வெப் சீரிஸ் ஹார்ட் பீட். தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸில் தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் தொடர்.. எந்த நேரத்தில் தெரியுமா? | Heart Beat Web Series In Vijay Tv

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஹார்ட் பீட் சீசன் 2 ஆரம்பமானது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 50 எபிசோட்களை கடந்துள்ள ஹார்ட் பீட் சீசன் 3-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



சீசன் 3


ஆர்.கே. மருத்துவமனை மீண்டும் அர்ஜுன் கைக்கு வந்துவிட்டது. ஆனால், தான் CEO ஆகாமல், விஜயை CEO ஆக்கியுள்ளார். மேலும் ரீனா மீண்டும் ஆர்.கே மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்துவிட்டார். அம்மா ரதி சீனியர் மருத்துவர், அப்பா CEO; இதற்கிடையில் ரீனா என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் தொடர்.. எந்த நேரத்தில் தெரியுமா? | Heart Beat Web Series In Vijay Tv



தொலைக்காட்சியில் ஒளிபரப்பு


இந்த நிலையில், நாளை முதல் திங்கள் – வெள்ளி வரை மாலை 4.00 மணி – 5.00 மணி வரை ஹார்ட் பீட் சீசன் 1 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் தொடர்.. எந்த நேரத்தில் தெரியுமா? | Heart Beat Web Series In Vijay Tv


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *