தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்… கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா?


ஜெயிலர் 2

தலைவரு நிரந்தரம் என்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் ரஜினிகாந்த்.

இவர் படம் நடித்தாலும் ஹிட், பேட்டி கொடுத்தாலும் வைரல், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசும் விஷயங்களும் வைரல். 40 வருடங்களுக்கு மேலாக ஜெயிக்கும் குதிரையாக மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேல் வசூல் வேட்டை செய்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

மொத்தமாக ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 780 கோடிக்கு மேல் தெறிக்கும் வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே ரூ. 195 கோடிக்கு மேல் வசூல் செய்ய ஆந்திராவில் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு ரூ. 100 கோடி எப்போதோ எட்டிவிட்டது, ஆந்திராவில் ரூ. 100 கோடி வந்துவிட்ட நிலையில் கர்நாடகா வசூல் விவரம் வந்துள்ளது.

கர்நாடகா டப்பிங் பதிப்பு ரூ. 97 கோடிக்கு மேல் வசூல் செய்து அங்கு ரூ. 85 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்த புஷ்பா 2வை பீட் செய்துள்ளது ஜெயிலர் 2.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *