கார் வாங்கியது ஒரு குத்தமா, சமீபத்திய விமர்சனங்களுக்கு நடிகை மமிதா பைஜு பதிலடி…


மமிதா பைஜு

தமிழ், மலையாள என இரண்டு மொழி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மமிதா பைஜு.

பிரேமலு, சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் சமீபத்தில் நிவின் பாலி ஜோடியாக பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அப்படியே தமிழ் பக்கம் வந்தால் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், கர உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாள சினிமா கவனிக்கும் ஒரு இளம் நாயகியாக மமிதா பைஜு உள்ளார்.

கார் வாங்கியது ஒரு குத்தமா, சமீபத்திய விமர்சனங்களுக்கு நடிகை மமிதா பைஜு பதிலடி... | Actress Mamitha Baiju About Buying New Car

புதிய கார்

அடுத்தடுத்து படங்கள் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வெற்றி கண்டுள்ள மமிதா பைஜு சமீபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கியுள்ளார்.

ஆனால் அவர் கார் வாங்கியது குறித்து சில மோசமான கருத்துகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளன.

இதுகுறித்து நடிகை மமிதா பைஜு ஒரு பேட்டியில், புது கார் வாங்கியது குற்றமா? அதை எதற்காக இப்படிப் பேசுபொருளாக்க வேண்டும்? பிரபலங்கள் கார் வாங்குவது ஒன்றும் தவறில்லையே, கடினமாக உழையுங்கள், நீங்கள் என்னைவிட பெரிய கார் கூட வாங்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.   

கார் வாங்கியது ஒரு குத்தமா, சமீபத்திய விமர்சனங்களுக்கு நடிகை மமிதா பைஜு பதிலடி... | Actress Mamitha Baiju About Buying New Car


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *