சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்… ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ்
கார்த்தி
அப்பா, அண்ணன் பெயர்களை வைத்து சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் கார்த்தி.
பிரபலத்தின் மகன் என்று சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் கார்த்தி தனது படங்கள், நடிப்பின் மூலம் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் என்றே கூறலாம், அவர் உதாரணம் அவரது முதல் படம் பருத்திவீரனையே கூறலாம்.
அந்த அளவிற்கு தனது முதல் படத்திலேயே சூப்பராக நடித்திருப்பார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, விருமன், மெய்யழகன் என நிறைய தரமான படங்களை கொடுத்துள்ளார்.
அடுத்து கார்த்தி நடிப்பில் மார்ஷல் என்ற படம் வெளியாக உள்ளது.
சிறுத்தை படம்
கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் ஆக்ஷன் கலந்த ஒரு ஜாலியான படமாக அமைந்தது தான் சிறுத்தை. சிவா இயக்க கார்த்தி, தமன்னா, சந்தானம் என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரக்ஷனா என்ற குழந்தை நடித்திருப்பார்.
தற்போது சமூக வலைதளங்களில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இவர் என ரசிகர்கள் புகைப்படங்களை வியந்து பார்க்கிறார்கள்.
