தனது 27வது படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?


சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க துவங்கி கலக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர்.

அப்படி ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன், மிமிக்ரி செய்து அப்படியே தொலைக்காட்சி பக்கம் வந்து தனது திறமையை முழுவதும் காட்டியவர். மிமிக்ரி, நடனம், தொகுப்பாளர் என கலக்கியவர் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்க மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தனது 27வது படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா? | Actor Sivakarthikeyan Salary For Sk 27 Movie

தொடர்ந்து மனம் கொத்திப் பறவை படத்தில் நடித்தவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியாக போகவில்லை.

சம்பளம்


தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தனது 27வது படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா? | Actor Sivakarthikeyan Salary For Sk 27 Movie

கயாடு லோஹர் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தற்போது என்னவென்றால், இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 60 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *