புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் மகாநதி சீரியல் புகழ் ருத்ரன்… நாயகி இவர்தானா…
மகாநதி சீரியல்
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதேபோல் சின்னத்திரையில் பணிபுரியும் இயக்குனர்களுக்கும் நல்ல ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
அப்படி சின்னத்திரையில் முக்கிய விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்களை கொடுத்தவர் தான் பிரவீன் பென்னட். இவர் இயக்கிய சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட தொடராக உள்ளது மகாநதி.
சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதில் நாயகியாக நடித்த லட்சுமி ப்ரியா இப்போது பிக்பாஸ் 10ல் கலந்துகொள்ள நாயகனாக நடித்த சுவாமிநாதன் விஜய் டிவியிலேயே புதிய சீரியல் ஒன்று கமிட்டாகியுள்ளார்.
ருத்ரன்
இந்த மகாநதி சீரியலில் நிவின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த ருத்ரன் குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
அதாவது அவர் ஹீரோவாக விஜய் டிவியில் ஒரு புதிய சீரியல் கமிட்டாகியுள்ளார். நேற்று விஜய் டிவியில் மிடில் கிளாஸ் மாதவன் என்ற சீரியல் வரப்போவதாக அறிவித்தோம், இந்த சீரியலில் தான் ருத்ரன் நாயகனாக நடிக்கிறாராம்.
சின்ன மருமகள் சீரியலை தயாரிக்கும் Estrella Stories தயாரிக்க பிரான்ஸிஸ் கதிரவன் இயக்க குப்ரா என்பவர் நாயகியாக நடிக்கிறாராம்.
