காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்

மைனஸ் ஜீரோ

ஹாலிவுட்டில் மான்ஸ்டர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் காட்சில்லா படம் என்றால் சொல்லவா வேண்டும், அப்படி ஒரு கூட்டம் வரும். அந்த வகையில் ஹாலிவுட் தாண்டி ஜப்பானிலும் சத்தமே இல்லாமல் பல காட்சில்லா படங்கள் உருவாகியுள்ளது.

ஆனால், எத்தனை படங்கள் வந்தாலும் ஜப்பான் இயக்குனர் டகாசியின் இயக்கத்தில் வெளிவந்த காட்சில்லா மைனஸ் ஒன் படம் உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. வெறும் 15 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 100+ மில்லியன் டாலர் வசூல் செய்தது மட்டுமில்லாமல், சிறந்த சிஜி ஒர்க் ஆக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், மீண்டும் டகாசி இயக்கத்தில் காட்சில்லா இரண்டாம் பாகமாக காட்சில்லா மைனஸ் ஜீரோ படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரீமியர் நேற்று நடக்க, படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, அதிலும் ஒருவர் படத்தை பார்த்த பிறகு, இப்படம் ‘டெர்மினேட்டர், டார்க் நைட் போன்று சிறந்த சீக்குவல் படமாக வந்துள்ளது என்றார்.

மேலும், இது வெறும் காட்சில்லா படமாக மட்டுமில்லாமல் மனித உணர்வுகளை பேசும் ஒரு படமாகவும் உள்ளது. கண்டிப்பாக படம் பிளாக்பஸ்டர் தான், அதோடு கிளைமேக்ஸ் காட்சி என்னை மிகப்பெரிய பிரமிப்பில் ஆழ்த்தியது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *