ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ
ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று.
முன்னணி தொலைக்காட்சி எனறு சொல்லும் அளவிற்கு மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சரிகமப ஷோ, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடம் செம ரெஸ்பான்ஸ்.
அதேபோல் கார்த்திகை தீபம், பாரிஜாதம், அயலி, திருமாங்கல்யம் போன்று வெற்றிகரமாக நிறைய சீரியல்களும் ஒளிபரப்பாகிறது.
புதிய ஷோ
அண்மையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வந்தது.
அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இப்போது ஜீ தமிழில் புதிய ஷோ என்ட்ரி ஆகியுள்ளது. அதாவது மாஸ் பசங்க கிளாஸ் பொண்ணுங்க என்ற டைட்டிலில் புதிய ஷோ வர உள்ளது.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ஆர்யா மற்றும் ரெஜினா கலக்க உள்ளனர். இதோ இந்த புதிய ஷோ குறித்து வந்த முதல் புரொமோ,
